Home » சினிமா » 500 தியேட்டர்களில் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’

500 தியேட்டர்களில் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரித்துள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இதில் விமல் கதாநாயகனாகவும், நாயகியாக ஆஷ்னா சவேரியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடித்துள்ளார். படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். திரைக்கதை வசனம் எழுதி ஏ.ஆர்.முகேஷ் இயக்கி உள்ளார்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாகிறது. இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை. கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும். ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்
வெளியாகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*