Home » சினிமா » ரூ.500 கோடி கிளப்பில் இணைந்த சூப்பர் ஸ்டார்

ரூ.500 கோடி கிளப்பில் இணைந்த சூப்பர் ஸ்டார்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷயகுமார், எமிஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவான 2.0 படம் கடந்த 29-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் 2.0 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

பாலிவுட் நடிகர் அக்ஷய குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் வட இந்தியாவிலும் படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வசூலை குவித்து வருகிறது.

உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூல் செய்த 2.0 படம் ஒரு வாரத்தில் ரூ.500 கோடியை ஈட்டி உள்ளது. இதன் மூலம் உலக அளவில் 500 கோடி வசூல் செய்த கதாநாயகர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பிடித்துள்ளார். பாகுபலி படத்திற்கு பிறகு ரூ.500 கோடியை தாண்டிய 2-வது தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மூலம் 500 கோடி கிளப்பில் ரஜினியும் இணைந்துள்ளார்.

இந்தியில் அமீர்கான், பாகுபலியில் நடித்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகியோர் 500 கோடி கிளப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*