Home » சினிமா » 3 மொழிகளில் ‘மகாவீர் கர்ணா’

3 மொழிகளில் ‘மகாவீர் கர்ணா’

‘மகாவீர் கர்ணா’ தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பீமனாக ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார்.

படத்திற்காக ஏறத்தாழ முப்பதடி உயரத்தில் ஒரு தேர் செட் அமைக்கப்படுகிறது. அதிலுள்ள நூறு மணிகளில் ஒரு மணியை திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத்தில் பூசை செய்து தச்சர்களிடம் கொடுக்கும் நிகழ்ச்சி 2ம் தேதி நடந்தது. 3 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சுரேஷ்கோபி, மலையாள திரை எழுத்தாளர் சங்கத்தலைவர் பி.உண்ணிக்கிருஷ்ணன் ஆகியோர் பங்கெடுத்தனர்.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை, உதவி வசனம் எழுதி உள்ளார். புராணப்பின்னணியில் எடுக்கப்படுகிறது. ‘எந்நு நின்றே மொய்தீன்’ என்னும் பெரும் வெற்றிப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். லண்டனைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் இப்படத்தை தயாரிக்கிறது. ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமும் கூட்டாக சேர பேச்சு நடைபெற்று வருகிறது.

இப்போதைய பட்ஜெட் 250 கோடி ரூபாய். செட்டுக்கு மட்டுமே 80 கோடி. 80 கோடிவரை வரைகலைக்காக. ஹைதராபாத் ராமோஜிராவ் நிறுவனத்தில் அப்பணிகள் நடைபெறுகின்றன.
கர்ணனின் திரைக்கதை 2016ல் திட்டமிடப்பட்டு 2017ல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது என்று ஜெயமோகன் தனது வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மாபெரும் பட்ஜெட் மற்றும் நடிகர்குழு காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதமாகிறது. வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் தற்போது ‘கடாரம்கொண்டான்’, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*