Home » சினிமா » பேட்ட பாடல்கள் ரஜினி தலைமையில் வெளியீடு

பேட்ட பாடல்கள் ரஜினி தலைமையில் வெளியீடு

சென்னை, டிச.6: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 9-ம் தேதி சாய்ராம் கல்லூரியில் ரஜினி தலைமையில் நடைபெறுகிறது.

இதனிடையே படத்தில் இடம் பெற்றுள்ள உல்லல்லா…. என தொடங்கும் 2-வது பாடல் நாளை மாலை வெளியாகிறது. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், லக்னோ, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் அன்று பேட்ட படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான மரண மாஸ்… பாடல் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவருடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இதுவரை ரசித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 9-ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் 5.30 மணி அளவில் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே படத்தில் இடம் பெற்றுள்ள உல்லல்லா…. என தொடங்கும் 2-வது பாடல் நாளை மாலை வெளியாகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*