Home » உலகம் » கோழியை பாராசூட் மூலம் விழ வைத்தவர்

கோழியை பாராசூட் மூலம் விழ வைத்தவர்

கோலாலம்பூர், டிச.6: மலேசியாவில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய விமானத்திலிருந்து கோழியை பாராசூட் மூலம் கீழே விழ வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் சில இளைஞர்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய விமானத்தைப் பறக்க விட்டனர்.

சுமார் 100 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது சாதாரண பாலித்தீன் பையால் செய்யப்பட்ட பாராசூட் மூலம் கோழி ஒன்றினை கீழே விழ வைத்தனர். ஆனால் கோழியின் எடைக்கு பாராசூட் தாங்காததால் கோழி வேகமாகக் கீழே விழுந்தது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*