This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Mon Dec 10 16:29:34 2018 / +0000 GMT

தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்


சென்னை, டிச.6:மேகதாது அணை விவகாரம் குறித்து நேரில் பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் சிவகுமார் கேட்டு கொண்டுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.5912 கோடியை ஒதுக்கி திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

அந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த நடவடிக்கை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் இசைவை பெறாமல் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே எந்த அணையையும் கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதையும் மீறி கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

காவிரி நீர் பிரச்சனை குறித்து நட்புரீதியில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவே கர்நாடக அரசு விரும்புவதாகவும் அதற்கான நேரத்தை முதலமைச்சர் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில்,
கர்நாடக அரசு இந்த கடிதத்தை எழுதி இருப்பது இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது
Post date: 2018-12-06 09:53:07
Post date GMT: 2018-12-06 09:53:07
Post modified date: 2018-12-06 09:59:53
Post modified date GMT: 2018-12-06 09:59:53
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com