This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ] Export date:Wed Feb 20 8:34:16 2019 / +0000 GMT ___________________________________________________ Title: கீழ்ப்பாக்கத்தில் லாரி மோதி மாணவி பலி --------------------------------------------------- சென்னை, டிச.6: கீழ்ப்பாக்கத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் உறவினருடன் பைக்கில் பள்ளிக்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் 12-வது தெருவை சேர்ந்தவர் ஜெனிமா அச்சு மேத்யூ (வயது12). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வழக்கம்போல் இன்று காலை 8.25 மணியளவில் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் புதிய ஆவடி சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக பைக் மீது தண்ணீர் லாரி மோதியுள்ளது. இதில், ஜெனிமா தலையில் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஜெனிமாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், வரும் வழியிலேயே ஜெனிமா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் சிறைப்பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூரை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 26) என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். பள்ளிக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. --------------------------------------------------- Images: http://www.maalaisudar.com/wp-content/uploads/2018/12/6ms-11c-480x380.jpg --------------------------------------------------- --------------------------------------------------- Post date: 2018-12-06 09:38:27 Post date GMT: 2018-12-06 09:38:27 Post modified date: 2018-12-06 09:38:27 Post modified date GMT: 2018-12-06 09:38:27 ____________________________________________________________________________________________ Export of Post and Page as text file has been powered by [ Universal Post Manager ] plugin from www.gconverters.com