Home » சென்னை » மழை பெய்தும் ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை

மழை பெய்தும் ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை

சென்னை, டிச.6:சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்கள் நல்ல மழை பெய்தும், ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம் பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்கின்றன.

வீராணத்தை தவிர சென்னையை சுற்றி உள்ள ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்தது. இருப்பினும் இந்த ஏரிகளில் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பூண்டி, புழல், சோழவரம், செம் பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் 1.7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.இதன் மொத்த கொள்ளளவு 11.2 டிஎம்சியாகும். தற்போதைக்கு சென்னை குடிநீர் தேவைக்கு வீராணம் ஏரியில் மட்டுமே நம்பி இருக்கும் நிலை உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*