Home » Flash News » இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்தா, டிச.6:இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.

மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் அதிகாலை 1.02 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*