Home » Flash News » நெல் ஜெயராமன் இன்று காலை காலமானார்

நெல் ஜெயராமன் இன்று காலை காலமானார்

சென்னை, டிச.6: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். நெல் வகைகளை காக்க பாடுபட்டதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். அவர்  169 பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயராமன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.05 மணியளவில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*