Home » தமிழ்நாடு » புதுச்சேரியிலும் சட்டமன்ற சிறப்புக்கூட்டம்

புதுச்சேரியிலும் சட்டமன்ற சிறப்புக்கூட்டம்

சென்னை,டிச.5:  மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதிக்க புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் விரைவில் நடைபெறும் என நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போதிலும் எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுவதை போல் புதுச்சேரி  சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டமும் விரைவில் நடைபெறும். இதில் மேகதாது அணை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்க துணை நிலை ஆளுனர் கிரண்பேடிக்கு எந்த உரிமையும் இல்லை. ஒவ்வொரு வார்டுகளிலும் வாக்குகள் எண்ணிக்கையில் வித்யாசம் காணப்படுகிறது. இதை சரிசெய்ய வேண்டி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*