Home » சினிமா » தயாரிப்பாளர் சங்கத்தின் எதிர்ப்பை மீறி 21-ல் மாரி-2 ரிலீஸ்

தயாரிப்பாளர் சங்கத்தின் எதிர்ப்பை மீறி 21-ல் மாரி-2 ரிலீஸ்

பண்டிகை மற்றும் விடுமுறைகளின் போது படங்களை வெளியிட்டால் வசூல் குவியும் என்பதால் அது போன்ற நாட்களை தேர்வு செய்ய சிறு பட தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் அவரது ரசிகர்களுக்கு அதுவே திருவிழாவாகும். வரும் டிசம்பர் 21-ம்தேதி முதல் கிறிஸ்துமஸ் வரை 5 நாட்கள் விடுமுறை வருவதால் அந்த தேதியில் படத்தை வெளியிட 5 படங்கள் தயாராக உள்ளன.

விஜய்சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சீதக்காதி படம் 21-ல் வெளியாக உள்ளது. ஜெயம்ரவி நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கி உள்ள அடங்கமறு படமும் 21-ல் ரிலீஸ் ஆகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி உள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் இந்த ரேசில் பங்கேற்க உள்ளது.

அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள பூமராங் படமும் விடுமுறையை குறிவைத்து 21-ல் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் எச்சரிக்கையை மீறி தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கி உள்ள மாரி-2 படம் 21-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்படி 5 முன்னணி நடிகர்களின் படம் ஒரே நேரத்தில் விடுமுறை கொண்டாட்டத்திற்கு வெளிவருவதால் அவர்களுடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*