மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=40856
Export date: Wed Feb 20 7:59:56 2019 / +0000 GMT

புதுச்சேரி சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா


புதுச்சேரி, டிச.5: புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் அவரது இருக்கை முன்பு அதிமுக, திமுக எம்எல்எக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடாக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என்று அதிமுக சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து மனு கொடுத்திருந்தார்.
ஆனால் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கான தேதி எதுவும் குறிப்பிடாததால் இன்று 12.15 மணியளவில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன் தலைமையில் எம்எல்ஏக்கள், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகிய மூன்று பேரும் சபாநாயகர் அலுவலத்திற்குள் நுழைந்து சபாநாயகரை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவரது இருக்கை முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.மேலும் இதனைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ சிவா, திடீரென சட்டமன்றத்திற்குள் நுழைந்து சபாநாயகரின் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அதிமுக, திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் வைத்திலிங்கம், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்தும் போது புதுவையில் ஏன் நடத்தவில்லை என தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர், முதல்வர் வெளியூரில் இருப்பதால் தகவல் வரவில்லை என்றார்.
உடனடியாக முதல்வரிடன் பேசுங்கள் என்று அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் கேட்டபோது போராட்டத்தை முதலில் கைவிடுங்கள் அப்புறம் பேசலாம் என்றார். இதற்கு சட்டமன்றம் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு தேதி அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Post date: 2018-12-05 10:29:23
Post date GMT: 2018-12-05 10:29:23

Post modified date: 2018-12-05 11:01:34
Post modified date GMT: 2018-12-05 11:01:34

Export date: Wed Feb 20 7:59:56 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com