w
Home » சினிமா » ‘பேட்ட’ படத்தில் விஜய்சேதுபதி கெட்டப்

‘பேட்ட’ படத்தில் விஜய்சேதுபதி கெட்டப்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினி ஜோடியாக த்ரிஷா, சிம்ரன், மாளவிகா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெறும் மரண மாஸ் பாடல் நேற்றுமுன்தினம் மாலை வெளியானது.

இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் வில்லன் என
சொல்லப்படும் விஜய்சேதுபதியின் தோற்றம் நேற்று வெளியானது.

அதில் விஜய்சேதுபதி கையில் துப்பாக்கியுடன் குரூர தோற்றத்தில் காணப்படுகிறார். விக்ரம்வேதா படத்தில் மாதவனுக்கு வில்லனாக நடித்தது விஜய்சேதுபதி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*