w
Home » உலகம் » பள்ளிக்கூடம் மீது மோதிய விமானம்

பள்ளிக்கூடம் மீது மோதிய விமானம்

புளோரிடா, டிச.5: மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் மீது சிறியரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

அமெரிக்காவில் புளோரிடா வில் உள்ள ஃபோர்ட் லாடர் டேல் என்ற இடத்தில் செஸ்னா ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக மனவளர்ச்சி குன்றி யோர் பள்ளிச் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் விமானம் தீப்பிடித்து வெடித்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து பள்ளிக்குள் இருந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அவசரம் அவசரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் விமானி உள்பட மூவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*