Home » விளையாட்டு » இந்திய அணியின் துவக்க வீரர் கம்பீர் ஓய்வு

இந்திய அணியின் துவக்க வீரர் கம்பீர் ஓய்வு

புதுடெல்லி, டிச.5: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த கௌதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கம்பீர் கடந்த 2004 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். 9 சதம், 22 அரை சதத்துடன் 4199 ரன்களையும், ஒருநாள் ஆட்டங்களில் 2003 முதல் 2013 வரை ஆடி 11 சதம், 34 அரை சதங்களுடன் மொத்தம் 5238 ரன்களை குவித்தார். குறிப்பாக 2011 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

மேலும் 2007-12 காலகட்டத்தில் 37 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக ஆடிய அவர் 932 ரன்களை குவித்தார். டி20 தொடக்க உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் கம்பீர் இடம் பெற்றிருந்தார். ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா, தில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாகவும் விளையாடியுள்ளார் கம்பீர்.
வரும் வியாழக்கிழமை ஆந்திரத்துக்கு எதிராக தொடங்கும் ரஞ்சி கோப்பை ஆட்டமே அவரது கடைசி ஆட்டமாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*