Home » Flash News » மொத்த கடனையும் திரும்ப தருகிறேன் : மல்லையா கெஞ்சல்

மொத்த கடனையும் திரும்ப தருகிறேன் : மல்லையா கெஞ்சல்

புதுடெல்லி, டிச.5:வங்கிகளிடம் வாங்கிய கடனில் அசல் முழுவதையும் திருப்பித் தருகிறேன்; தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர பல்வேறு நீதிமன்றங்கள் மூலமாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான அவர் தெரிவித்திருப்பதாவது:-

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நான் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பணத்தை மோசடி செய்து விட்டு ஓடி விட்டதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.அனைத்துமே தவறு. இந்த விவகாரத்தில் ஏன் நான் நியாயமாக நடத்தப்படவில்லை? கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நான் சமர்ப்பித்துள்ள பணம் திருப்பிச் செலுத்தும் விரிவான திட்டம் பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை?வருத்தமாக உள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது பொருளாதாரச் சிக்கலில் சிக்கி கொண்டதற்கு விமான எரிபொருள் விலைஉயர்வும் ஒரு முக்கிய காரணமாகும். புகழ்பெற்ற கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் தன்னுடைய காலத்தில் மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விலையான பீப்பாய்க்கு 140 டாலர் என்ற விலை உயர்வைச் சந்தித்தது. நஷ்டங்கள் அதிகரித்ததன் காரணத்தால் வங்கிகளின் பணம் செலவழிக்கப்பட்டது. நான் வங்கிக் கடனில் 100% அசலைத் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளேன். தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி தீவிரம் அடைந்துள்ளது. லண்டன் நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தொடரப்பட்டு முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது.இந்த நிலையில் மல்லையா கடன் அசலை செலுத்துவதற்கு முன் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*