Home » Flash News » அதிமுக சார்பில் பேரணி சமாதியில் உறுதிமொழி

அதிமுக சார்பில் பேரணி சமாதியில் உறுதிமொழி

சென்னை, டிச.5 :மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பேரணியாக சென்று சென்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் மட்டுமில்லாது லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு 15 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மெரினா கடற்கரை அருகே எம்ஜிஆர் சமாதிக்கு பின்புறம் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*