Home » தலையங்கம் » இந்தியாவுக்கு கவுரவம்

இந்தியாவுக்கு கவுரவம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் பியூனஸ்  அயர்சில் ஜி20 அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பருவநிலை மாற்றம், வர்த்தகம், சர்வதேச நிதியம், பாலின சமநிலை, எதிர்கால பணிகள், ஊழல் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தியாவின் சார்பில் பொருளாதார குற்றங்களை இழைப்பவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பியோடி தஞ்சம் அடைவதை ஜி20 நாடுகள் அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். ஜி20 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள்  உள்ளன.

உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90
சதவீதத்தை ஜி20 அமைப்பில் உள்ள நாடுகள் வகிப்பதே இந்த அமைப்பின் முக்கியத்துவத்துக்கு எடுத்துக்காட்டாகும். அதேபோல உலகின் மொத்த வர்த்தகத்தில் 80 சதவீதம் இந்த நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. உலகின் 3ன் 2 பங்கு மக்கள் தொகை இந்த நாடுகளில் உள்ளது. ஜி20 அமைப்பின் நிரந்தர அழைப்பாளர் என்ற விருந்தினர் நாடாக ஸ்பெயின் உள்ளது.

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி அடுத்த உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த உறுப்பு நாடுகளின் அனுமதியை கோரினார். உடனடியாக அந்த உறுப்பு நாடுகள் அதற்கு அனுமதி அளித்தன. இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் 2022ம் ஆண்டு கொண்டாடப்படும்போது ஜி20 உச்சி மாநாடு நடைபெற வேண்டும் என்ற மோடியின் விருப்பத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டு
உள்ளன. இந்த மாநாட்டிற்கு வருகை தர வேண்டுமென அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவதின் மூலம் சர்வதேச அரங்கில் நம் நாட்டிற்கு பெரும் அங்கீகாரம் கிடைக்கும். இத்தகைய ஒரு கவுரவத்தை இந்தியாவுக்கு ஜி20 நாடுகள் வழங்கியுள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*