Home » குற்றம் » மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது

மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது

சென்னை, டிச.4:  பொன்னேரி அருகே மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, சடலத்தை புதரில் வீசிவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 35). இவருக்கு சோனியா (வயது 28), சூர்யா (வயது 25) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சோனியாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதனிடையே, சோனியாவின்

நடத்தையில் சந்தேகம் அடைத்த அருள் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, முற்றியதில், ஆத்திரமடைந்த அருள், சோனியாவை கழுத்தை நெறித்துவிட்டு, அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில், சோனியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், யாருக்கும் தெரியாமல் உடலை அப்புறப்படும்நோக்கில், சாக்குமூட்டையினுள் சடலத்தை கட்டி அருகில் உள்ள புதரில் தூக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், அருள் தனது மனைவி சோனியாவை அடித்து கொலை செய்துவிட்டு உடலை புதரில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, அருளை கைது செய்த போலீசார் அவரை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*