Home » விளையாட்டு » கோலி படையை விமர்சித்து செய்தி வெளியீடு: ஆஸி., மீடியாவிற்கு கண்டனம்

கோலி படையை விமர்சித்து செய்தி வெளியீடு: ஆஸி., மீடியாவிற்கு கண்டனம்

அடிலெய்டு, டிச.4:  ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியையும், கேப்டன் விராட் கோலியையும் விமர்சித்து செய்தி வெளியிட்ட ஆஸ்திரேலியா ஊடகத்திற்கு அந்நாட்டு மக்களே கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் . ஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் மைதானத்தில் வரும் 6-ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி அடிலெய்ட் சென்றடைந்திருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை விமர்சித்து ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ளது. ’தி ஸ்கார்டி பேட்ஸ்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, வேகப்பந்துவீச்சைப் பார்த்து பயந்து ஓடுபவர்கள், பகலிரவு டெஸ்ட் போட்டியைப் பார்த்து பயப்படுபவர்கள் ஒட்டுமொத்தமாக இந்திய அணி அனைத்துக்கும் அச்சப்படுபவர்கள் என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் ரிச்சார்ட் ஹின்ட்ஸ் தனது ட்விட்டர் பதிவில், சிறுபிள்ளைத்தனமாகச் செய்தி வெளியிட்டுள்ளார்கள், இது கிரிக்கெட் கலாச்சாரத்துக்கு முரணானது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*