Home » விளையாட்டு » லூக்கா மாட்ரிச்சுக்கு சர்வதேச கால்பந்து விருது

லூக்கா மாட்ரிச்சுக்கு சர்வதேச கால்பந்து விருது

பாரிஸ், டிச.4: சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய கால்பந்து வீரர்களை கவுரவிக்கும் நோக்கில் பலோன் டி’ஓர் என்னும் விருது வழங்கப்பட்டுவருகிறது. பிரென்ச் கால்பந்து பத்திரிகையால் 70 வருடங்களுக்கும்மேலாக இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்தது.

இதில், 2018-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக குரோஷியாவின் லூக்கா மாட்ரிச்சை தேர்ந்தெடுத்து விருது வழங்கியுள்ளனர். ஃபிபா வழங்கும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும், ஐரோப்பிய கால்பந்து கழகம் வழங்கும் சிறந்த வீரருக்கான விருதையும் மாட்ரிச் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*