Home » சினிமா » மெகா ஹிட்டான மரண மாஸ் பாட்டு

மெகா ஹிட்டான மரண மாஸ் பாட்டு

சென்னை, டிச.4:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் பாடல் நேற்று மாலை வெளியானது. பாடல் வெளியான 2 மணி நேரத்திலேயே 2 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்து ரசித்ததால் மெகா ஹிட் பாடலானது.  இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், லக்னோ, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான மரண மாஸ் பாடல் நேற்று மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. படத்தில் ஓப்பனிங் சாங்காக இதை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் சேர்ந்து பாடியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி படத்தின் முதல் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை பாடல் வெளியான 2 மணி நேரத்தில் 2 மில்லியனுக்கும் (20 லட்சம்) அதிகமானோர் கேட்டு ரசித்துள்ளனர். தொடர்ந்து அதிகமானோர் கேட்டு ரசித்து வருவதால் மரண மாஸ் பாடல் மெகா ஹிட்டாகி உள்ளது. மற்ற பாடல்கள் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*