Home » சினிமா » ரூ.500 கோடியை நெருங்கும் ‘2.0’

ரூ.500 கோடியை நெருங்கும் ‘2.0’

சென்னை, டிச.4:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 29-ம் தேதி வெளியான 2.0 படம் 5 நாளில் ரூ.500 கோடி வசூல் செய்து உலக சாதனை படைத்துள்ளது.  ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷயகுமார், எமிஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவான 2.0 படம் கடந்த 29-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. படம் வெளியானது முதல் ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்து படத்தை பார்த்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் 2.0 படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகர் அக்ஷய குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் வட இந்தியாவிலும் படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.  இந்நிலையில், உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று 5-ம் நாளிலும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ரூ.80 கோடிக்கு மேல் நேற்றும் வருவாய் கிடைத்துள்ளதால் 2.0 படம் ரூ.500 கோடியை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் மெகா பிளாக் பஸ்டர் ஹிட்டாகி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*