Home » குற்றம் » போலீஸ் எனக்கூறி கேமரா பறிப்பு

போலீஸ் எனக்கூறி கேமரா பறிப்பு

சென்னை, டிச.4:  திரிசூலம் மலை அருகே உள்ள இடத்தில், மத்திய பாதுகாப்பு படை போலீசார், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவர். இந்த இடத்தை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவர்கள் சிலர், அந்த இடத்தை கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 பேர், இது புகைப்படம் எடுக்க தடைசெய்யப்பட்ட பகுதி என்றும், தாங்கள் போலீஸ் என்றும் கூறி, மாணவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 கேமராக்களை பறிமுதல் செய்துகொண்டு சென்றுள்ளனர். இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவன் நவீன் உட்பட 2 பேரும், தங்களது பெற்றோருடன் மீனம்பாக்கம் காவல்நிலையத்திற்கு சென்று கேமராக்களை தருமாறு கேட்ட போது தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*