w
Home » குற்றம் » லிஃப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி: தம்பதிகள் கைது

லிஃப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி: தம்பதிகள் கைது

சென்னை, டிச.3:  இரவு நேரங்களில் காரில்  செல்பவர்களிடம் லிஃப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டுவந்த தம்பதிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன். தொழிலதிபதிரான இவர், நேற்றிரவு செங்குன்றத்தில் இருந்து காரில் வந்துள்ளார். பாடி மேம்பாலம் அருகே வந்த போது, காரினை வழிமறித்த 2 பெண்கள், அவரிடம் லிஃப்ட் கேட்டுள்ளனர். இவர் அந்த பெண்களை காரில் ஏற்றிக்கொண்டு சிறிதுதூரம் சென்றபோது, அந்த பெண்கள் கேட்டுகொண்டதின்பேரில் விஸ்வநாதன் காரைநிறுத்தியுள்ளார்.

அப்போது, மேலும் 2 மர்மநபர்கள் காரில் ஏறி, விஸ்வநாதனை சரமாரியாக தாக்கி, அவர் அணிந்திருந்த செயின், ப்ரேஸ்லெட் மற்றும் ரூ.10,000 பணத்தை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில், வில்லிவாக்கத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த வரலட்சுமி- சுகுமார், கொண்டித்தோப்பை சேர்ந்த ரேவதி-வெங்கடேசன் என்பதும், தம்பதிகளான இவர்கள், மாதவரம், செங்குன்றம் பகுதியில் லிஃப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*