w
Home » குட்றம் » பெண் பயணியின் கைப்பை மாயம்

பெண் பயணியின் கைப்பை மாயம்

சென்னை, டிச.3:  ஈரோடை சேர்ந்தவர் கமலா (வயது 50). இவர், மதுரவாயலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்றிரவு ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

கைப்பையை பேருந்து இருக்கையில் வைத்துவிட்டு, பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் சென்றுவிட்டு தனது இருக்கைக்கு வந்து பார்க்கும்போது, கைப்பை மாயமானது தெரியவந்துள்ளது.

இது குறித்த புகாரின்பேரில், சி.எம்.பி.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். மாயமான கைப்பையில், ரூ.80,000 பணம் மற்றும் செல்போன் இருந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*