w
Home » சென்னை » சிலை கடத்தல் பிரிவுக்கு அபய்குமார் சிங் நியமனம்

சிலை கடத்தல் பிரிவுக்கு அபய்குமார் சிங் நியமனம்

சென்னை, நவ.30:சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து இப்பிரிவின் தலைவராக ஏடிஜிபி அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் உடனடியாக பொறுப்பு ஏற்பார் என்று அரசு அறிவித்துள்ளது.

ரெயில்வே போலீஸ் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரது பதவி காலத்தில் தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால அரிய சிலைகள் மீட்கப்பட்டன. காஞ்சிபுரம் உள்ளிட்ட கோவில்களில் சிலைகள் செய்வதில் நடைபெற்ற மோசடியையும் கண்டுபிடித்தார்.

கடத்தல் தொடர்பாக தொழிலதிபர், தலைமை ஸ்தபதி, அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்டோர் மீது நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன.இந்நிலையில் பொன் மாணிக்க வேல் நேற்று ஓய்வு பெற்றார். ரெயில்வே போலீஸ் சார்பில் அவருக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசியபோது, போலீசார் நீதிமன்றத் திற்கு மட்டுமே பயப்பட வேண்டும். வேறு யாருக்கும் அஞ்சத்தேவை யில்லை என்று கூறியிருந்தார்.

இன்று காலை அவர் அளித்த பேட்டியில், தமது பதவி காலத்தில் ஆற்றிய பணி மனநிறைவை தருவதாகவும், முழு திருப்தியோடு ஓய்வு பெறுவதாகவும் கூறினார்.
இதனிடையே சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய தலைமை போலீஸ் அதிகாரியாக ஐபிஎஸ் அதிகாரி அபய்குமார் சிங்கை நியமனம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட அறிக்கையில், கரூரில் தமிழ்நாடு காகித ஆலையில் கண் காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டு உடனடியாக பொறுப்பு களை ஏற்பார் என கூறப்பட்டு உள்ளது.

இதுவரை இப்பிரிவுக்கு ஐஜி தலைவராக இருந்த நிலையில் இதன் அந்தஸ்து உயர்த்தப்பட்டு ஏடிஜிபி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதன்படி அபய்குமார் சிங் இன்று சென்னை வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*