மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=40302
Export date: Wed Mar 20 9:13:49 2019 / +0000 GMT

ஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த 2.0 படம்


சென்னை, நவ.30: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான 2.0 படம் ஒரே நாளில் உலக அளவில் ரூ.220 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பாகுபலி, தங்கல் படங்களின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷயகுமார், எமிஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவான 2.0 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் நேற்று வெளியான இந்த படத்திற்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருந்தது. தமிழகத்திலும் சிறப்பு காட்சிகளை காண ரசிகர்கள் ஆர்வமுடன் தியேட்டருக்கு வந்திருந்தனர்.

வரும் ஞாயிற்றுகிழமை வரை 2.0 படத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்து தியேட்டர்களிலும் விற்று தீர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 1 மில்லியன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்தியாவில் வெளியான 2.0 படம் வசூலை குவித்துள்ளது. உலக அளவில் ஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் ரூ.40 கோடியும், சென்னையில் மட்டும் ரூ.2.64 கோடியும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் வசூலில் உலக சாதனை படைத்த பாகுபலி, தங்கல் படங்களின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் படம் ஓடத்தொடங்கினால் ரூ.1000 கோடியை வசூல் செய்ய வாய்ப்பு உள்ளது.
Post date: 2018-11-30 08:34:27
Post date GMT: 2018-11-30 08:34:27

Post modified date: 2018-11-30 09:29:21
Post modified date GMT: 2018-11-30 09:29:21

Export date: Wed Mar 20 9:13:49 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com