w
Home » Flash News » விமானியின் சாதுர்யத்தால் 63 பேர் உயிர்தப்பினர்

விமானியின் சாதுர்யத்தால் 63 பேர் உயிர்தப்பினர்

சென்னை, நவ.30:சென்னையிலிருந்து 59 பயணிகளுடன் கோழிக்கோடு புறப்பட்ட தனியார் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது என்ஜினில் தீப்பொறி பறந்ததையடுத்து, உடனடியாக சென்னைக்கு திரும்பிவந்து பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து கோழிக்கோட்டிற்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 59 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் இருந்தனர். புறப்பட்ட 20-வது நிமிடத்தில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென என்ஜினில் தீப்பொறி பற்றியதை விமானி கண்டார்.

உடனடியாக அவர், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விமானம் திருப்பி அழைக்கப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டன. விமானியின் முன்யோசனை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை விமான நிலைய அதிகாரிகள் பாராட்டினர்.

வழக்கமாக இந்த விமானம் காலையில் கோழிக்கோடு சென்று, பின்னர் திரும்பி வந்து மதுரைக்கு புறப்பட்டுச்செல்லும். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மதுரை பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மதுரை செல்ல போர்டிங்பாஸ் வாங்கிய பயணிகள் ஸ்பைஸ் ஜெட் கவுண்டர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*