Home » Flash News » இனி பாமக தனித்துப் போட்டியிடாது:அன்புமணி

இனி பாமக தனித்துப் போட்டியிடாது:அன்புமணி

சென்னை, நவ.19:இனி வரும் தேர்தல்களில் பாமக தனித்துப் போட்டியிடாது என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

அடுத்து வரும் தேர்தலில் நாங்கள் ஏதாவது ஒரு கூட்டணியில் இருப்போம். எந்த கூட்டணி என்பது, தேர்தலை பொறுத்து அமையும். நாடாளுமன்றத்துக்கும் மட்டும் தேர்தலா அல்லது சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தலா என்பதை பொறுத்து எந்த கூட்டணி என்பதை முடிவு செய்வோம். இனி வரும் தேர்தல்களில் எந்த பிரச்சனையையும் தனித்து நின்று ஜெயிக்க முடியாது.

22 துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து கவர்னரிடம் மனு அளித்தோம். ஆனால், அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மத்திய அரசின் தூண்டுதலால் கவர் னர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறாரோ என்று கூறப்படுகிறது. மதுவிலக்கு கொள்கையில் பாமக உறுதியாக உள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது நடிகர்கள் யாரும் கட்சி தொடங்கவில்லை. அவர்கள் இறந்த பின்னர் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். இங்கு யார் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், கொள்கை பிடிப்போடு செயல்பட வேண்டும்.

சர்கார் படத்தில் விஜய் 22 காட்சிகளில் புகை பிடிப்பது கண்டிக்கத் தக்கது. அவர் ஏற்கனவே என்னிடம் படங்களில் இனி புகைப்பிடிக்கும் காட்சியை வைக்க மாட்டேன் என்று சொன்னார். ஆனால் அவர் அதை மீறியுள்ளார்.

எனக்கும் எனது தந்தைக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர் தான் தலைவர் என்பதால் அவர் கூறியதை நான் கேட்கிறேன்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*