w
Home » விளையாட்டு » மகளிர் டி20:ஆஸியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்தியா

மகளிர் டி20:ஆஸியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்தியா

கயானா, நவ.18:மகளிர் டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கான கடைசி லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா அணியை 48 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது, தனியா பாட்டியா. ஸ்மிருதி மந்தானா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். பின்னர் மந்தானா-ஜெமிமா இணை சேர்ந்து ரன்களை சேர்த்தது. ஆனால் ஜெமிமா 6 ரன்களோடு ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலா 3 சிக்ஸர், பவுண்டரியுடன் 27 பந்துகளில் 43 ரன்களை குவித்து டெலிஸா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வேதா கிருஷ்ணமூர்த்தி 3, தயாளன் ஹேமலதா 1, அருந்ததி ரெட்டி 6, தீப்தி சர்மா 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தானா அபாராமாக ஆடி 3 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 55 பந்துகளில் 83 ரன்களை விளாசி ஷூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மந்தானா டி20இல் தனது 6-ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. ராதா யாதவ் 1 ரன்னோடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸி. பந்துவீச்சாளர் எலைஸ் பெர்ரி இறுதிக் கட்டத்தில் அபாரமாக பந்துவீசி 16 ரன்கள் மட்டுமே தந்து 3 விக்கெட்டை சாய்த்தார். 168 ரன்கள் இலக்கோடு ஆடிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

பெத் மூனி 19, எல்ஸி வில்லானி 6, கார்டனர் 20, மெக் லேன்னிங் 10 என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ரேச்சல் ஹெய்ன்ஸ் 8, சோபி மோலினிக்ஸ் 9, டெலிஸா 1, ஷூட் 4, டய்லா 0 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 119 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா எடுக்க முடிந்தது. இந்திய தரப்பில் அனுஜா பட்டீல் அபாரமாக பந்துவீசி 15 ரன்களை மட்டுமே தந்து 3 விக்கெட்டை சாய்த்தார். தீப்தி சர்மா, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டைவீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடம் பெற்றது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*