Home » அரசியல் » புயல்:ஸ்டாலின் வராததால் பொது மக்கள் அதிருப்தி

புயல்:ஸ்டாலின் வராததால் பொது மக்கள் அதிருப்தி

திருவாரூர், நவ.18:புயல் சேதங்களை பார்வையிடச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகமாக பாதிக்கப்பட்ட திருத் துறைப்பூண்டிக்கு வராதது குறித்து அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித் துள்ளனர்.

மேலும் மறியல் செய்தவர்களிடம் அமைச்சர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.

கஜா புயல் சேதத்தை பார்வையிடுவ தற்காக மு.க.ஸ்டாலின் நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றார். வேதாரண்யத்தை சுற்றியுள்ள பகுதியை பார்வையிட்ட பிறகு அவர் நேரடியாக பட்டுக்கோட்டை மன்னார்குடிக்கு சென்று விட்டார்.

அதிகமாக பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டிக்கு அவர் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று 3-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் தண்ணீர் வசதி யின்றி அவதிப்படும் நிலை ஏற்பட் டுள்ளது. முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கும் போதிய வசதி செய்து தரப்படவில்லை என கூறப் படுகிறது. இதனிடையே அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, காமராஜ் ஆகியோர் நேற்று திருத்துறைப்பூண்டி பகுதியை பார்வையிட்டுவிட்டு கரும்பியூர் சென்றனர். அங்கு பொதுமக்கள் மறியல் செய்து கொண்டிருந்தனர். அவர்களது கோரிக்கையை கேட்டுவிட்டு அமைச்சர்கள் புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அந்த வழியாக வந்த கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் சத்துணவுத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் ஆகியோரை மணலி அருகே குரும்பி என்ற கிராமத்தில் பொதுமக்கள் மறித்து தங்களது குறைகளை கூறினர்.

அப்போது மின்சார வசதிக்காக ஜெனரேட்டர் அனுப்பி வைக்கப் படும் என்றும், லாரிகளில் குடிநீர் சப்ளை தொடங்கும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*