Home » இந்தியா » 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், நவ.18:தெற்கு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஜைனபோரா நகரில் ரெப்பான் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அவர்களின் அடையாளம் தெரியவரவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*