Home » Flash News » தமிழகத்தை நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு

தமிழகத்தை நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு

சென்னை, நவ.18:வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நெருங்கி வருவதால் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைனம் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.

தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*