w
Home » விளையாட்டு » பெண்கள் டி20: அயர்லாந்துடன் இன்று இந்தியா மோதுகிறது

பெண்கள் டி20: அயர்லாந்துடன் இன்று இந்தியா மோதுகிறது

 

கயானா, நவ.15: இன்று நடக்கும் போட்டியில் அயர்லாந்தை வெல்லும் பட்சத்தில், 8 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீசில் நடந்துவரும் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின், இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவிலுள்ள புரோவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இது, இந்தியாவிற்கு முக்கியமான ஆட்டமாக கருதப்படுகிறது.

இந்த போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில், அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கமுடியும். இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில், முதல் போட்டியில் சதம் அடித்து அதிரவைத்த கேப்டன் ஹர்மன் ப்ரித் கவுர், 2-ம் போட்டியில் அரைசதம் கடந்த முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்றைய போட்டியிலும் கைகொடுத்தால் இந்தியாவிற்கு வெற்றி நிச்சயம்.

பந்துவீச்சை பொறுத்தமட்டில், ஹேமலதா, பூணம் யாதவ், அருந்ததி, ராதா உள்ளிட்டோர் விக்கெட் வேட்டையை துவக்கினால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். அதேசமயம், முதல் இரு போட்டிகளிலுமே தோல்வி கண்ட அயர்லாந்து அணி, இன்றைய போட்டியை கைப்பற்ற தீவிரம் காட்டும் என்பதால், இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது எனலாம். இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவின் 8 வருட ஏக்கம்

உலக கோப்பை டி20 தொடர் வரலாற்றில், இந்தியா இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக, தான் பங்கேற்ற 5 தொடர்களில் 2 முறை (2009, 2010) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று அயர்லாந்தை வீழ்த்தும் பட்சத்தில், இந்திய அணி 8 ஆண்டுகளுக்குபின் அரையிறுதிக்குள் கால்பதிக்கலாம்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*