w
Home » விளையாட்டு » 2-வது டெஸ்ட்: 3 விக்கெட்டுகளை இழந்து இங்கி., தடுமாற்றம்

2-வது டெஸ்ட்: 3 விக்கெட்டுகளை இழந்து இங்கி., தடுமாற்றம்

பல்லகெலே, நவ.14:இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வுசெய்தது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கேடோன் ஜென்னிங்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர், களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் (19), கேப்டன் ஜோ ரூட் (14) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன்படி, முதல் 19 ஓவர்களுக்குள்ளேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இங்கிலாந்து அணி தடுமாறியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் 69 ரன்கள் சேர்த்து தடுமாற்ற ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்திவருகிறது. ரோரி பன்ஸ் (34), ஜோஸ் பட்லர் ஆகியோர் களத்தில் இருந்து விளையாடிவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*