w
Home » விளையாட்டு » பெண்கள் டி20: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா வெற்றி

பெண்கள் டி20: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா வெற்றி

செயின்ட் லூசியா, நவ. 13:  பெண்கள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளன.

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதின. நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்த இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சால் 20 ஓவர்கள் முடிவில், வங்கதேச அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பின்னர் பெய்த மழைக்காரணமாக, இங்கிலாந்து அணிக்கு 16 ஓவரில் 64 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 9.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து ‘ஏ’ பிரிவில் ஒரு வெற்றியுடன் மூன்று புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் இலங்கை – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*