w
Home » விளையாட்டு » உலகக்கோப்பையால் களையிழக்குமா ஐபிஎல்?

உலகக்கோப்பையால் களையிழக்குமா ஐபிஎல்?

துபாய், நவ. 13:  எதிர்வரும் ஆண்டில் குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால், உலகக்கோப்பைக்கு முக்கியத்துவம் அளித்து, ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்கும் சூழலுக்கு சில நாட்டு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. தங்கள் நாட்டுக்காக ஓராண்டு முழுவதும் விளையாடினாலும் கிடைக்காத சம்பளம், இந்த 45 நாள் தொடரில் கிடைத்து விடுவதால் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், எதிர்வரும் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

அதேசமயம், மே மாத இறுதியில் உலகக்கோப்பை போட்டிகளும் தொடங்கவுள்ளது. தொடர்ச்சியாக 45 நாட்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவிட்டு, அடுத்தது உடனடியாக உலகக்கோப்பையில் பங்கேற்றால் வீரர்களால் முழு திறனையும் வெளிப்படுத்த இயலாது என சில நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் கருதுகின்றன.

இதனால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடுவது சந்தேகமே என்கிறார்கள், விஷயமறிந்தவர்கள். மறுமுனையில், இந்தியா, நியூசிலாந்து போன்ற சில நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்கள் தொடர் முழுவதும் விளையாட அனுமதி அளித்துள்ளனர். இதனால், கிரிக்கெட் வீரர்கள் கிட்டத்தட்ட 3 மாதங்கள் தங்கள் உடல் நிலையை முழு தகுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதன்காரணமாகவே, தற்போது கோலி, தோனி, பும்ரா போன்றோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறையில் ஓய்வளித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*