w
Home » விளையாட்டு » கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி

கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி

சென்னை, நவ. 12: இந்தியா-வெ.இண்டீஸ் இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது.

இப்போட்டியில் இந்திய அணி அசால்ட்டாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில், வெ.இண்டீஸ் அணியினர் அபாரமாக பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 குவித்தனர்.

பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித், கே.எல்.ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாறியது. இதனையடுத்து, தவானுடன், ரிஷாப் பன்ட் ஜோடி சேர்ந்து, அணியை சரிவில் இருந்து மீட்டபோதிலும், கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், ஆட்டத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது.

கடைசி பந்தில் மணீஷ் பாண்டே ஒரு ரன் எடுக்க, இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து, கோப்பையை கைப்பற்றியது. ரோஹித்தின் கேப்டன்சியில் இந்திய அணி, டி20 தொடரில் எதிரணியை ஒயிட்வாஷ் செய்வது இது 2-வது முறையாகும்.

‘இதெல்லாம் டி20-ல் சகஜமப்பா’ – ரோஹித்

இது குறித்து இந்திய கேப்டன் ரோஹித் கூறுகையில், இது போன்ற த்ரில்லிங், டி20 போட்டிகளில் நடப்பதுதான். எங்கள் வீரர்களின் இதுபோன்ற ஆட்டத்திறன் அதிக நம்பிக்கையை கொடுக்கிறது. நாங்கள் முந்தையை வெற்றிகளின் மூலம் மனநிறைவு கொள்ளவில்லை. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று விளையாடினோம். ஓர் அணியாக நாங்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. அணியில் விளையாடிய சிலர் இந்தியாவுக்காக அதிகம் விளையாடியதில்லை. அதனால் இதுபோன்ற போட்டிகள் அவர்கள் திறமையை வெளி கொண்டுவருவதற்கு சரியான வாய்ப்பு, என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*