w
Home » விளையாட்டு » பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி

கயானா, நவ. 12:இந்தாண்டுக்கான பெண்கள் டி-20 உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடந்துவருகிறது.

கயானா பகுதியில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஹேமலதா மற்றும் பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, மிதாலி ராஜ் 56 ரன்களும் (7 பவுண்டரி), மந்தனா 26 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த சீசனில் இந்தியாவின் 2-வது வெற்றி இதுவாகும்

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*