Home » அரசியல் » அமைச்சர் வீரமணிக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு

அமைச்சர் வீரமணிக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு

சென்னை, நவ.8:நில மோசடிக்கு துணைபோனதாக அமைச்சர் வீரமணிக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வேலூரில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு பெற்றிருந்த ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 2010 ம் ஆண்டு இந்த நிலத்தை சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வாங்கியுள்ளனர். பின் அந்த நிலத்தை 225 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து, தங்களுக்கு 65 கோடி ரூபாய் வழங்க ஒப்புக் கொண்டனர்.

ஆனால், ஒப்பந்தப்படி, ரூ. 65 கோடியை கொடுக்காமல், வணிக வரித்துறை அமைச்சர் வீரமணியின் உதவியுடன், சட்ட விரோதமாக தங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த விற்பனை முடிந்தால், 100 கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால் அமைச்சர் வீரமணி, சட்ட விரோதமாக, தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி, அந்த நிலத்தில் இருந்து தங்களை வெளியேறும்படி மிரட்டி வருகின்றார். போலி ஆவணங்களில் தங்களிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.

இதுசம்பந்தமாக போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப் பேரவை செயலாளருக்கும், அரசு கொறடாவுக்கும் புகார் அளித்துள்ளோம். அந்த புகாரை முதல்வருக்கு அனுப்பி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது, விளக்கம் அளிக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, 2 வாரங்களுக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*