Home » குற்றம் » பார்க்கிங்கில் இருந்த கார்கள் தீப்பற்றி எரிந்தது

பார்க்கிங்கில் இருந்த கார்கள் தீப்பற்றி எரிந்தது

சென்னை, நவ. 8: தனியார் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை, கொத்தவால்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 55). இவர், அங்குள்ள மணிகண்ட முதலி தெருவில் உள்ள காலி மனையில் கார் பார்க்கிங் வைத்து நடத்திவருகிறார்.

இங்கு ஏராளமான கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 2.15 மணியளவில் அங்கிருந்த ஹோண்டா கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவியதில் அருகில் இருந்த மற்றொரு காருக்கும் தீ பரவியது.

இது குறித்த தகவலின்பேரில், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்த வந்த தீயணைப்பு படையினர் அதிகாலை 4 மணிவரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இது குறித்து கொத்தவால் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில், மகாவீர் (வயது 39) மற்றும் ஜெகதீஷ் (வயது 26) ஆகியோருக்கு சொந்தமான கார்கள் தீக்கிரையானது விசாரணையில் தெரியவந்தது.

தீபாவளி முடிவடைந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*