Home » இந்தியா » நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல்

நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல்

புதுச்சேரி, நவ.8:புதுச்சேரி மாநிலம் உழவர் கரை நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக என் ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கல்யாண சுந்தரம் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் உழவர் கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி ரெட்டியார் பாளையம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-உழவர் கரை நகராட்சி அலுவலகத்தில் நேற்று பணியாற்றி கொண்டிருந்தேன். மக்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது என் ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கல்யாணசுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவாதம் நடைபெற்று கொண்டிருந்த போது பிரச்சனையில் ஈடுபட்டனர்.அந்த நேரத்தில் என் ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கல்யாண சுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்.

கொலை மிரட்டல் விடுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியிருந்தார். இந்தபுகார் மனு குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த என் ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவார்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*