Home » இந்தியா » மும்பை கமிஷனர் ஆபீசில் கமல் மகள் அக்ஷரா புகார்

மும்பை கமிஷனர் ஆபீசில் கமல் மகள் அக்ஷரா புகார்

மும்பை, நவ.8:நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்தது தொடர்பாக மும்பை போலீசில் அக்ஷரா ஹாசன் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டில், பால்கி இயக்கத்தில் வெளியான ஷமிதாப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அக்ஷரா ஹாசன். அதைத் தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், கமல்ஹாசன் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவிர, இவர் சில இந்தி படங்களில் நடனக்கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் கமல் இயக்கி நடிக்கும் சபாஷ்நாயுடு படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார்.

சமீபத்தில் உள்ளாடையுடன் அக்ஷாஹாசன் எடுத்துக்கொண்ட சில அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இது மிகவும் அதிர்ச்சியை அளித்தது. கமல்ஹாசன் அரசியலில் பரபரப்பாக இயங்கி வரும் சூழலில் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த புகைப்படம் குறித்து அக்ஷரா ஹாசன் இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அவர் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டவர் குறித்து ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*