Home » குற்றம் » மேடவாக்கம் அருகே இளைஞர் வெட்டிகொலை

மேடவாக்கம் அருகே இளைஞர் வெட்டிகொலை

சென்னை, நவ.8: மேடவாக்கம் அருகே பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை, மேடவாக்கம் அருகே உள்ள நூக்கம்பாளையம் எழில் நகரைச் சேர்ந்தவர் சந்தீப்குமார் (வயது 23). இவர், வீடு வீடாக
சென்று தண்ணீர் கேன் விநியோகிக்கும் தொழில் செய்து வந்தார். தீபாவளியன்று சந்தீப்குமாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் இடையே பட்டாசு வெடிக்கும்போது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

மதுபோதையில் ஏற்பட்ட இந்த தகராறில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை, சந்தீப்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், தாக்கப்பட்ட வாலிபரின் நண்பர்கள் ஆத்திரமடைந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து சந்தீப்குமாரை சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியுள்ளது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*