Home » தமிழ்நாடு » இரவு, பகலாக பட்டாசு குப்பைகள் அகற்றம்

இரவு, பகலாக பட்டாசு குப்பைகள் அகற்றம்

சென்னை, நவ.8:தீபாவளி பட்டாசு குப்பை மற்றும் பிற குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சியின் 19,000 ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை வரை 66 டன் பட்டாசு குப்பை அகற்றப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் நேர கட்டுப்பாடு விதித்திருந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த ஆண்டை போல் பெரிய அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை.

எனினும் நேர கட்டுப்பாட்டையும் மீறி பல்வேறு இடங்களில் தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. கடந்த ஆண்டில் 80 டன் பட்டாசு குப்பை மற்றும் 5300 டன் பிற குப்பைகள் தீபாவளி தினத்தில் சேர்ந்தன.

இந்த ஆண்டு 4800 டன் பிற குப்பைகளும், பட்டாசு குப்பைகள் 66 டன் என்றும் கணக்கிடப்பட்டு அகற்றப்பட்டிருக்கிறது. தெருக்களில் தேங்கிய குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் 19,000 ஊழியர்கள் நவம்பர் 5,6 மற்றும் 7 தேதிகளில் 3 ஷிப்டுகளில் இரவு, பகலாக பணியாற்றினார்கள்.

மண்டலம் வாரியாக பட்டாசு குப்பைகள் சேகரிக்கப்பட்டு எடை போடப்பட்டுள்ளது.இந்த குப்பைகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற் சாலை கழிவு மேலாண்மை பிரிவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அடையார், அம்பத்தூர் பகுதிகளில் மிக அதிகமாக 10.81 டன் அளவுக்கு குப்பைகள் சேர்ந்ததாகவும், இதற்கு அண்ணாநகர் மாதவரம் பகுதிகளில் குறைந்த அளவு குப்பைகள் சேர்ந்ததாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பட்டாசு குப்பைகளை தார் பாய்களில் சேகரித்து தனியாக கும்மிடிப்பூண்டிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குப்பைகளையும், பிற குப்பைகளுடன் சேர்த்து பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளுக்கு அனுப்பியதாகவும் சில குடியிருப்புவாசிகள் குறை கூறி உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*