Home » குற்றம் » மனைவியின் கழுத்தை அறுத்த கொன்ற கணவன்

மனைவியின் கழுத்தை அறுத்த கொன்ற கணவன்

ராமநாதபுரம், நவ.8: ராமநாதபுரம் தேவிப்பட்டினம் அருகே கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்குடியிருப்பை சேர்ந்த முனியசாமி என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுமான பணிகளுக்காக துபாய் சென்று இருந்தார். அப்போது அங்கு மும்தாஜ் பேகம் என்ற பெண்ணுடன் முனியசாமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மும்தாஜை தமிழகம் அழைத்து வந்த முனியசாமி திருமணம் செய்து கொண்டு புதுக்குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். 10 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் இன்று காலை திடீரென அவர்கள் வீட்டில் மும்தாஜ் பேகம் அலறும் சப்தம் கேட்டுள்ளது.

இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது முனியசாமி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். வீட்டில் மும்தாஜ் பேகம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*