Home » தமிழ்நாடு » பண மதிப்பிழப்பு: ஒரு நபரால் ஏற்பட்ட பேரிடர் – ஸ்டாலின்

பண மதிப்பிழப்பு: ஒரு நபரால் ஏற்பட்ட பேரிடர் – ஸ்டாலின்

சென்னை, நவ.8:பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் அழிவுக்கு வழிவகுத்து விட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார். அப்போது புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கரன்சி நோட்டுக்களான ரூ.1000 மற்றும் ரூ.500 ஆகியவை உடனடியாக செல்லாது என அவர் அறிவித்தார்.

பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. பண மதிப்பிழக்கத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை நாட்டின் கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அப்பாவி மக்கள் பலர் தங்களது உயிரை இழந்த சம்பவங்களை இந்த நாடு மறாவது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து, சிறு மற்றும் குரு நிறுவனங்கள் மூடுவிழா கண்டு, நாட்டின் பொருளாதாரம் பின்நோக்கிச் சென்றுவிட்டது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*