Home » விளையாட்டு » ஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்?

ஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்?

மெல்போர்ன், நவ. 8:  தொடர் தோல்வியை சந்தித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்க, ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. டிவி கேமராவிலும் அது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேன்கிராஃப்ட் தவறை ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஆதரவாக இருந்ததாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு தலா ஒரு வருடமும், பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இதனிடையே, சமீபத்தில் நடந்துமுடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது. எனவே, ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்கவும், இந்த மாதம் 21-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்றால், ஸ்மித், வார்னரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில், வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. அது பரிசீலிக்கப்படும். வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால், இந்திய தொடர் தொடங்குவதற்குள் ஸ்மித், வார்னர் மீதான தடை விலக்கிக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*